செவ்வாய், 24 ஜனவரி, 2017

வீரம் பொதுமறைதான்

வீரம் பொதுமறைதான் 


வேலனுக்கும் வீரமுண்டு
வேல்விழிக்கும் வீரமுண்டு
கண்டேன் நான் கடற்கரையில்
கண்டங்கே களிப்புற்றேன்!

வெற்றிதனை கொண்டாட
வேண்டாமே முரசொலிகள் !
சாதனையை போற்றிடவே
சங்கொலிகள் தேவை இல்லை !

சங்கம் வளர்த்த தமிழ்ச் 
சொற்கள் மட்டும் போதும் என்பேன் !
வீர தமிழ் முழக்கங்கள்
விண்ணதிர வேண்டும் என்பேன் !

பேச்சுக்கு உரிமையில்லை
பேராண்மை எதற்கு  என்பேன் !
எழுத்துரிமை இல்லை என்றால்
எதற்கிங்கே  குடியரசு !

கூட்டாட்சி தத்துவத்தை
குழிதோண்டி புதைத்துவிட்டீர் !
கொல்லுமடா உம்மை எந்தன்
கொடுந்தமிழ்ச்  சொற்கள் தாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக