வெள்ளி, 28 ஏப்ரல், 2017

இல்லாள் சொல்லால் நல்லாள் -என்றால்
இனித்திடுமே என்றும் வாழ்க்கை!

இல்லாள் சொல்லால் நல்லாள் -இல்லெனில்
இறந்ததுவே இந்த யாக்கை!

செவ்வாய், 11 ஏப்ரல், 2017

கம்யுனிசம் ஒரு சித்தாந்தம்
கம்யுனிசம் ஒரு வேதாந்தம்
கம்யுனிசம் ஒரு வாழ்வியல் -ஆனால்
கம்யுனிசம் ஆனதே அரசியல் பிழைப்பு!

தா பாவே தா பாவே
தமிழன்னை உன் நாவிலேன் குடிவந்தாள்?
மாவோவே வந்திட்டாலும் -உன்
மார்பைத்தான் பிளந்தெறிவான்!

எங்கே எங்கள் நல்லக்கண்ணு?
எங்கே எங்கள் வாணியம்பாடி?
தரம் தாழ்ந்து அரசியல் பேசும் நீ
தமிழ் மண்ணில் பிறக்கலாமா?

பல் வெள்ளை உடல் கருமை
மேல் துண்டோ சிவப்பு -ஓ
நீ அந்த தி மு காவோ?
நல்ல நாவளம் நாடறிந்த பெயர்
நல்லதை  பேச மாட்டாயா?

தமிழ் புலமை ஆங்கில புலமை
மண்ணாங்கட்டி! மனிதனா நீ?
பேச்சுரிமை கருத்துரிமை -உன்
விடயத்தில் ஓர் கேலிக்கூத்து!

வியாழன், 30 மார்ச், 2017

டெல்லி சென்று போராடும்
டெல்டா தமிழக விவசாயிகள்!
தள்ளி நின்று பார்த்திருக்கும்
தனிபெரும் தலைவர் மோடியன்றோ?
அள்ளி கொடுக்க மனமில்லை - பார்க்க
அனுமதி கூட கிடைக்கவில்லை!
எள்ளி  நகையாடும் நிலைமையிலே
எதற்காக இங்கே இறையாண்மை?
சுள்ளி பொறுக்கும்  எம்குலப்பெண்
சோற்றில் உப்பிட்டே ஊட்டுகிறாள்!
கல்லும் மண்ணும் கடுநெஞ்சும்
கரையும் தமிழன் குரல்கேட்டால்!
உன்மனம் கரைய மறுப்பதுமேன்?
உலகம் சுற்றும் வாலிபனே!
கார்பனும் வேண்டாம் களவும் வேண்டாம்
காவிரித் தாயை கொடுத்துவிடு!
கடலையும் மண்ணையும் கொடுத்துவிட்டால்
கார்ப்பரேட்டுகள் எம்மின் காலடியில்!
நெஞ்சம் விரிந்து பலனில்லை!
நெடுவாசல் திட்டம் மூடிவிடு!
உள்ளம் விரிந்து வரும்பொழுது
உளமார யாமும் வாழ்த்துவமே!
விற்போர் புரியும் எம்பெண்டிர்
வேல்போர் அதிலும் வல்லவர்காண்!
அறப்போர் புரியும் எம்மையுமே!
மறப்போர் புரிய தூண்டுவதேன்?
காட்டை வளைத்தீர் மடம்கண்டீர்!
கங்கையை புனிதநதி என்றீர்!
நாட்டை ஆள யாம்மென்றீர்!
நற்றமிழ் மக்களை வஞ்சித்தீர்!
கேட்டை விளைத்தீர் யமக்கிங்கே !
கெடுபலன் உமக்கும் விளையாதோ?
பட்டை நாமம் சாத்திவிட்டீர் !
பார்ப்போம் நிலைப்பது யாரென்றே!

புதன், 1 மார்ச், 2017

கட்ஜு எனும் ஜட்ஜுவே - உம்மை
தமிழன் என்று சொல்லச் சொல்லி
யார் அடித்தார்?
வாடிவாசல் திறந்த பின்னே!
நெடுவாசல் மூடப்பட வேண்டும் தானே!

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

டே உன் தொல்லை தாங்க முடியலைடா!
எப்ப நிறுத்துவ?

வியாழன், 16 பிப்ரவரி, 2017

நீ கமலஹாசன் போல நடனம் ஆடுவதும்
இரண்டாம் ஆண்டில் விடுதியில்
டேபிள் டென்னிஸ் விளையாடியதும்
மறக்கமுடியா தருணங்கள்!