ஞாயிறு, 29 ஜனவரி, 2017

அடக்குமுறை


அடக்குமுறைக்கு ஆயுள் குறைவு என்பது
அகிலம் அறிந்த .உண்மை.
அன்று மன்னராட்சியில் அடக்குமுறை .
இன்று  மக்கள் ஆட்சியிலும் அடக்குமுறை.
உண்மைகள் உணர்த்தப்பட்டாலும்
மனித மனம் நம்ப மறுக்கத்தான் செய்கிறது.
வ்ரலாறு படைக்கப்பட்டாலும்
வன்முறைகள் தூண்டப்படத்தான் செய்கின்றன.
வரலாற்றை திரும்பிப் பார்த்தால்
அடக்குமுறையாளர்களின் அடிமனதில்
ஆழமான பயமே தெரிகிறது. இது
அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் .
இப்போது வந்துள்ள டிரம்ப் காலம் வரை.
இனி வரும் காலங்களிலும் தொடரும்
என்ற உண்மையை உணர்ந்தே
செயல் பட வேண்டும்.
மெரீனா தந்த வெற்றியை அங்கே
காளைக்கு சிலை அமைத்து
காலமெல்லாம் கொண்டாட வேண்டும் .

சனி, 28 ஜனவரி, 2017

மெரீனா சொல்லும் பாடம் !

மெரீனா சொல்லும் பாடம் !


திருக்குறளும் திருத்தப் படலாம் தீங்கில்லா
தமிழ்ச்சொல் லால்என் பேன்!

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
சான்றோன் எனக்கேட்டத்  தாய் ! - இது குறள்

திருத்தம்

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகவை
சான்றோர் எனக்கேட்டத் தாய் !  

செவ்வாய், 24 ஜனவரி, 2017

வீரம் பொதுமறைதான்

வீரம் பொதுமறைதான் 


வேலனுக்கும் வீரமுண்டு
வேல்விழிக்கும் வீரமுண்டு
கண்டேன் நான் கடற்கரையில்
கண்டங்கே களிப்புற்றேன்!

வெற்றிதனை கொண்டாட
வேண்டாமே முரசொலிகள் !
சாதனையை போற்றிடவே
சங்கொலிகள் தேவை இல்லை !

சங்கம் வளர்த்த தமிழ்ச் 
சொற்கள் மட்டும் போதும் என்பேன் !
வீர தமிழ் முழக்கங்கள்
விண்ணதிர வேண்டும் என்பேன் !

பேச்சுக்கு உரிமையில்லை
பேராண்மை எதற்கு  என்பேன் !
எழுத்துரிமை இல்லை என்றால்
எதற்கிங்கே  குடியரசு !

கூட்டாட்சி தத்துவத்தை
குழிதோண்டி புதைத்துவிட்டீர் !
கொல்லுமடா உம்மை எந்தன்
கொடுந்தமிழ்ச்  சொற்கள் தாமே!

பரணி பாட வேண்டும்

ஏன் அடித்தாய் எங்களை நீ!
யார் சொல்லி அடித்தாய் நீ ?
சட்டம் உம்  கையில்
சர்வதிகாரம் உம்  கையில்
என்று எண்ணி நீயும்
இங்கு எம்மை அடித்தாயோ?

தமிழ் வழிப் போர்க்கண்டு
தரணியே வியக்கையிலே
தடியடி நடத்தி நீயும்
தரம் கெட்டு போனதுமேன் ?

பாரை  வியக்க வைத்து
பார் போரை  அதிரவைத்த
பைந்தமிழ் சொந்தங்களே -உம்புகழலை
பரணி பாட வேண்டும் என்பேன் !

யாரும் பாடலாம். நானும் முயன்றிடுவேன் !

திங்கள், 23 ஜனவரி, 2017

சல்லிக்கட்டு போராட்ட களம்

கடல் விளிம்பில் நிற்கும் போராளிகளை
கண்டு கண்கள் கசிகிறது. நெஞ்சம்  பதைக்கிறது
காவலர்களை ஏவிய கயவர்களே
கருணை சிறிதும் இல்லையா?
ஓட்டு கேட்டு வரும் போது
 உங்களுக்கு வைக்கிறோம் வேட்டு !