சனி, 14 பிப்ரவரி, 2009

அக்னி சிறகொன்று கண்டேன்!

  • அக்னி சிறகொன்று கண்டேன்!- அது
  • அரியணை ஏறிய அதிசயம் கண்டேன்!
  • செக்கினை சிதம்பரத்தில் கண்டேன்!- இவன்
  • சிந்தையில் நானந்த சிவனையே கண்டேன்!
  • கொக்கினை குளக்கரையில் கண்டேன்!- அதன்
  • கூர்நாசி கூர்மையைஇவன் பார்வையில் கண்டேன்!
  • எக்கினை இரும்பினுள் கண்டேன்! -இவன்
  • எண்ண வலிமையை அதனுடன் வைத்தேன்!
  • மொக்கது மலராகக் கண்டேன்!- இவன்
  • முயற்சியும் திருவினை யாகவே கண்டேன்!
  • பொக்ரானில் பாதாளம் கண்டேன்!-இவன்
  • பொலிவுடன் நின்றிருந்த காட்சியும் கண்டேன்!
  • சிக்கனத்தை சிறுவயது முதலே - இவன்
  • செலவழித்த செய்திகளை செவிவழியே கேட்டேன்!
  • இக்கணமும் கடைபிடிக்க கண்டேன்! - இந்த
  • இறையன்பன் இயற்பண்பை இமயத்துடன் வைத்தேன்!
  • சக்தியுள் சிவனைநான் கண்டேன் !-இந்த
  • சந்நியாசி உள்ளத்தில் சமத்துவத்தை கண்டேன்!
  • சுக்கினுள் மருந்துண்டு கண்டேன்! -இந்த
  • சுல்தானின் உள்ளத்தில் விருந்தோம்பல் கண்டேன்!
  • சுக்கிரனை சோதிடத்தில் கண்டேன்!-இந்த
  • சுந்தரனின் சாதகத்தை அவன்கணிக்க கண்டேன்!
  • வக்கிரங்கள் வளர்ந்துவர கண்டேன்! - இந்த
  • வாத்தியாரின் வழிகாட்டல் வேண்டுமெனக் கண்டேன்!
  • வாக்களிக்க கேட்டிருக்க கண்டேன்! - இவன்
  • வாக்கில் சுத்தமது வீற்றிருக்க கண்டேன்!
  • சொக்கனிடம் ராமன்வேண்ட கண்டேன்! - அந்த
  • சொந்தமண்ணில் இவன்வீட்டின் எளிமையையும் கண்டேன்!
  • கடைகோடி தமிழனிவன் கண்டேன்!-அன்று
  • குடியரசு தலைவரான காட்சியையும் கண்டேன்!
  • உடைமாறிப் போனதை கண்டேன்! - ஆனால்
  • உள்ளத்தில் மாற்றமில்லை உண்மையாய் கண்டேன்!
  • செய்தியாளர் சந்திப்பு கண்டேன்!- இவன்
  • சிறிதுநேரம் தரையமர்ந்து இளைப்பாறக் கண்டேன்!
  • பொய்யான மரபுடையக் கண்டேன்!- அவர்க்கு
  • பொறுப்புணர்வு வேண்டுமென இவன்வுரைகக் கண்டேன்!
  • கனவுகள் காணசொன்ன கவிஞன்! - இன்றும்
  • கல்விதனை போதிக்கும் கடமையுள்ள ஆசான்!
  • இனமான எங்கள் தமிழ்மகனை - இந்த
  • இந்தியத்தாய் சுவீகாரம் செய்துகொண்டு விட்டாள்
  • பிறைசூடன் குடிகொண்ட பூமி - அந்த
  • பிறைநிலவே இவன் இல்ல பிரியமான சாமி!
  • கறைபடியா கைகள்கொண்ட மனிதன் - நாம்
  • கவலை இன்றிவாழ்வதற்கு கனவுகாணும் புனிதன்!
  • இணையில்லா எங்கள் உள்ளக்கள்வன் - இவன்
  • இளைஞர்களின் உள்ளத்தில் எந்நாளும் முதல்வன்!
  • துணையில்லா தூயத்தமிழ் பிள்ளை - இவன்
  • துணிவான கனவிற்கு வானமே எல்லை!
  • பலகாலம் இவன்வாழ வேண்டும்! - இந்த
  • பாரதமே இவனாலே பயனடைய வேண்டும்!
  • உலகையே நாமால வேண்டும்! - இந்த
  • உத்தமனின் கனவெல்லாம் நனவாக வேண்டும்!
  • எமனோடு போராட வேண்டும்! - இவன்
  • இன்னுயிரை எடுப்பதற்கு தடைபோட வேண்டும்!
  • சமதர்மம் பேணுகின்ற பெருமான் - இவன்
  • சபைதனிலே நாயகனாய் மீண்டும் வரவேண்டும்!
  • கடல்சூழ்ந்த ராமேஸ்வரம் ஊராம்! - அப்துல்
  • கலாம் என்பதிவ னுடைய பேராம்!
  • மடலெழுத வார்த்தையில்லை பெண்ணே! - இந்த
  • மாமனிதன் பேர்சொன்னால் மதிப்புவரும் முன்னே!

எழுத்து பிழைகள் பொறுக்க.

மணிவேல்

5 கருத்துகள்:

  1. This is fantastic stuff!! Normally Kavthi has many karpanai.. or hype to praise or proof the strength of the poet.. But, this is 100% real one on APJ.

    Well done.. It is worth to share to him as well.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் மணிவேல்

    அருமையான கவிதை - உண்மை இயல்பு - சிந்தனை அருமை - பாரதத்தின் தவப்புதல்வன் அப்துல் கலாமினைப் பற்றிய கவிதை அருமை

    நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. அன்பின் மணிவேல்

    அருமை அருமை - கவிதை அருமை - உண்மை - இயல்பு - நல்ல சிந்தனையில் உதித்த நற்கவிதை. பாரதத்தின் தவப்புதல்வன் அப்துல் க்லாமினைப் பற்றிய அருமைக் கவிதை.

    நல்வாழ்த்துகள் மணி வேல்

    இந்த சொல் சரிபார்ப்பினை எடுத்து விடலாமே ! ( WORD VERIFICATION )

    பதிலளிநீக்கு