பட்டிக்காட்டான்

வெள்ளி, 28 ஏப்ரல், 2017

இல்லாள் சொல்லால் நல்லாள் -என்றால்
இனித்திடுமே என்றும் வாழ்க்கை!

இல்லாள் சொல்லால் நல்லாள் -இல்லெனில்
இறந்ததுவே இந்த யாக்கை!
இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 12:33 PM கருத்துகள் இல்லை:

வியாழன், 30 மார்ச், 2017

டெல்லி சென்று போராடும்
டெல்டா தமிழக விவசாயிகள்!
தள்ளி நின்று பார்த்திருக்கும்
தனிபெரும் தலைவர் மோடியன்றோ?
அள்ளி கொடுக்க மனமில்லை - பார்க்க
அனுமதி கூட கிடைக்கவில்லை!
எள்ளி  நகையாடும் நிலைமையிலே
எதற்காக இங்கே இறையாண்மை?
சுள்ளி பொறுக்கும்  எம்குலப்பெண்
சோற்றில் உப்பிட்டே ஊட்டுகிறாள்!
கல்லும் மண்ணும் கடுநெஞ்சும்
கரையும் தமிழன் குரல்கேட்டால்!
உன்மனம் கரைய மறுப்பதுமேன்?
உலகம் சுற்றும் வாலிபனே!
கார்பனும் வேண்டாம் களவும் வேண்டாம்
காவிரித் தாயை கொடுத்துவிடு!
கடலையும் மண்ணையும் கொடுத்துவிட்டால்
கார்ப்பரேட்டுகள் எம்மின் காலடியில்!
நெஞ்சம் விரிந்து பலனில்லை!
நெடுவாசல் திட்டம் மூடிவிடு!
உள்ளம் விரிந்து வரும்பொழுது
உளமார யாமும் வாழ்த்துவமே!
விற்போர் புரியும் எம்பெண்டிர்
வேல்போர் அதிலும் வல்லவர்காண்!
அறப்போர் புரியும் எம்மையுமே!
மறப்போர் புரிய தூண்டுவதேன்?
காட்டை வளைத்தீர் மடம்கண்டீர்!
கங்கையை புனிதநதி என்றீர்!
நாட்டை ஆள யாம்மென்றீர்!
நற்றமிழ் மக்களை வஞ்சித்தீர்!
கேட்டை விளைத்தீர் யமக்கிங்கே !
கெடுபலன் உமக்கும் விளையாதோ?
பட்டை நாமம் சாத்திவிட்டீர் !
பார்ப்போம் நிலைப்பது யாரென்றே!
இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 3:29 PM கருத்துகள் இல்லை:

புதன், 1 மார்ச், 2017

கட்ஜு எனும் ஜட்ஜுவே - உம்மை
தமிழன் என்று சொல்லச் சொல்லி
யார் அடித்தார்?
இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 10:32 AM கருத்துகள் இல்லை:
வாடிவாசல் திறந்த பின்னே!
நெடுவாசல் மூடப்பட வேண்டும் தானே!
இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 10:22 AM கருத்துகள் இல்லை:

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

டே உன் தொல்லை தாங்க முடியலைடா!
எப்ப நிறுத்துவ?
இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 9:06 AM கருத்துகள் இல்லை:

வியாழன், 16 பிப்ரவரி, 2017

நீ கமலஹாசன் போல நடனம் ஆடுவதும்
இரண்டாம் ஆண்டில் விடுதியில்
டேபிள் டென்னிஸ் விளையாடியதும்
மறக்கமுடியா தருணங்கள்!
இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 10:22 AM கருத்துகள் இல்லை:
குன்கா குன்கா குன்கா
இறைவன் நீயே என்பேன்!
வரலாறு படைத்தாயடா!
வாழ்க உன் புகழ்!
வளர்க உன் சுற்றமும் நட்பும்!
நானிலம் போற்றும்
நல்ல தீர்ப்பு வழங்கினாய்!
வாழிய வாழிய வாழியவே!
இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 10:11 AM கருத்துகள் இல்லை:

புதன், 15 பிப்ரவரி, 2017

கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்!
திண்டாட்டம் மாட்டிக்கிட்டா திண்டாட்டம்!
இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 12:02 PM கருத்துகள் இல்லை:

இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 11:09 AM கருத்துகள் இல்லை:
தப்பித்தது தமிழகம் தற்காலிகமாக
தலை வணங்குகிறேன் குன்காவிற்கு!
இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 10:59 AM கருத்துகள் இல்லை:

வியாழன், 9 பிப்ரவரி, 2017

sujatha

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ரங்கராஜன்
பிறப்பு எஸ். ரங்கராஜன்
மே 3, 1935
திருவல்லிக்கேணி, சென்னை, இந்தியா
இறப்பு பெப்ரவரி 27, 2008 (அகவை 72)
சென்னை, இந்தியா
புனைப்பெயர் சுஜாதா
தொழில் பொறியாளர், எழுத்தாளர்
நாடு இந்தியர்
துணைவர்(கள்) சுஜாதா ரங்கராஜன்
பிள்ளைகள் கேசவா பிரசாத், ரங்கா பிரசாத்

http://www.writersujatha.com
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்

பொருளடக்கம்

  • 1 வாழ்க்கைக் குறிப்பு
  • 2 புனைபெயர்
  • 3 ஆக்கங்கள்
    • 3.1 புதினங்கள்
    • 3.2 குறும் புதினங்கள்
    • 3.3 சிறுவர் இலக்கியம்
    • 3.4 சிறுகதைத் தொகுப்புகள்
    • 3.5 சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்புகள்
    • 3.6 கவிதைத் தொகுப்பு
    • 3.7 நாடகங்கள்
    • 3.8 கட்டுரைத் தொகுப்புகள்
  • 4 திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்
  • 5 பணியாற்றிய திரைப்படங்கள்
  • 6 மறைவு
  • 7 மேற்கோள்கள்
  • 8 வெளி இணைப்புகள்

வாழ்க்கைக் குறிப்பு

சீரங்கம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பி.இ (மின்னணுவியல்) கற்றார். திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் அப்துல் கலாம், சுஜாதா இருவரும் ஒரே வகுப்பில் படித்தார்கள்.
அதன் பின்னர் நடுவண் அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லியில் முதலில் பணியாற்றினார். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார். பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பினார்.
அறிவியலை ஊடகம் மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கழகம் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவுப் பொறியை உருவாக்க முக்கியக் காரணமாக இவர் இருந்தார். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக்கில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இப்பொறியை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியைப் பாராட்டி அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.

புனைபெயர்

இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.

ஆக்கங்கள்

சுஜாதா இலக்கியம், நாட்டார் வழக்காறு, தமிழ்ச் செவ்விலக்கியம், துப்பறியும் கதை, அறிவியல் கதை, சிறுகதை, புதினம், குறும் புதினம், நாடகம், திரைப்படம், கணிப்பொறியியல், இசை என்று பல பாணிகளிலும் வகைகளிலும் எழுதியுள்ளார். புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என இருநூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். ஒரு கவிதைத் தொகுப்பும் படைத்துள்ளார்.

புதினங்கள்

  • பதவிக்காக
  • ஆதலினால் காதல் செய்வீர்
  • பிரிவோம் சந்திப்போம் (நூல்)
  • அனிதாவின் காதல்கள்
  • எப்போதும் பெண்
  • என் இனிய இயந்திரா
  • மீண்டும் ஜீனோ
  • நிலா நிழல்
  • ஆ..!
  • கரையெல்லாம் செண்பகப்பூ
  • யவனிகா
  • கொலையுதிர்காலம்
  • வஸந்த்!வஸந்த்!
  • ஆயிரத்தில் இருவர்
  • ப்ரியா
  • நைலான் கயிறு
  • ஒரு நடுப்பகல் மரணம்
  • மூன்று நிமிஷம் கணேஷ்
  • காயத்ரி
  • கணேஷ் x வஸந்த்
  • அப்ஸரா
  • மறுபடியும் கணேஷ்
  • விபரீதக் கோட்பாடு
  • அனிதா இளம் மனைவி
  • பாதிராஜ்யம்
  • 24 ரூபாய் தீவு
  • வசந்தகாலக் குற்றங்கள்
  • வாய்மையே - சிலசமயம் - வெல்லும்
  • கனவுத்தொழிற்சாலை
  • ரத்தம் ஒரே நிறம்
  • மேகத்தைத் துரத்தினவன்
  • நிர்வாண நகரம்
  • வைரம் (புதினம்)
  • ஜன்னல் மலர்
  • மேற்கே ஒரு குற்றம்
  • உன்னைக் கண்ட நேரமெல்லாம்
  • நில்லுங்கள் ராஜாவே
  • எதையும் ஒருமுறை
  • செப்டம்பர் பலி
  • ஹாஸ்டல் தினங்கள்
  • ஒருத்தி நினைக்கையிலே
  • ஏறக்குறைய சொர்க்கம்
  • என்றாவது ஒரு நாள்
  • நில் கவனி தாக்கு
  • காந்தளூர் வசந்தகுமாரன் கதை
  • பெண் இயந்திரம்
  • சில்வியா
  • பேசும் பொம்மைகள்
  • வண்ணத்துப்பூச்சி வேட்டை
  • கம்ப்யூட்டர் கிராமம்
  • கொலை அரங்கம்
  • ஓடாதே!
  • திசை கண்டேன் வான் கண்டேன்

குறும் புதினங்கள்

  • தீண்டும் இன்பம்
  • குரு பிரசாத்தின் கடைசி தினம்
  • ஆகாயம்
  • காகித சங்கிலிகள்
  • மண்மகன்
  • மோதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்

சிறுவர் இலக்கியம்

  • "பூக்குட்டி"

சிறுகதைத் தொகுப்புகள்

  • ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்
  • நிஜத்தைத் தேடி
  • தூண்டில் கதைகள்

சிறுகதை மற்றும் குறும் புதினத் தொகுப்புகள்

  • நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்

கவிதைத் தொகுப்பு

  • நைலான் ரதங்கள்

நாடகங்கள்

  • டாக்டர். நரேந்திரநாத்தின் வினோத வழக்கு
  • கடவுள் வந்திருந்தார்
  • பாரதி இருந்த வீடு
  • ஆகாயம்

கட்டுரைத் தொகுப்புகள்

  • கணையாழியின் கடைசி பக்கங்கள்
  • கற்றதும் பெற்றதும் [பாகம் 1,2,3,4]"
  • கடவுள் இருக்கிறாரா
  • தலைமை செயலகம்
  • எழுத்தும் வாழ்க்கையும்
  • ஏன் ? எதற்கு ? எப்படி ?[பாகம் 1,2]
  • சுஜா'''தா'''ட்ஸ்
  • இன்னும் சில சிந்தனைகள்
  • தமிழ் அன்றும் இன்றும்
  • உயிரின் ரகசியம்
  • நானோ டெக்னாலஜி
  • கடவுள்களின் பள்ளத்தாக்கு
  • ஜீனோம்
  • திரைக்கதை எழுதுவது எப்படி?

திரைப்படமாக்கப்பட்ட இவரின் கதைகள்

  • அனிதா இளம் மனைவி (இது எப்படி இருக்கு - திரைப்படம்)
  • காயத்ரி
  • கரையெல்லாம் செண்பகப்பூ
  • ப்ரியா
  • விக்ரம்
  • வானம் வசப்படும்
  • ஆனந்த தாண்டவம்
  • சைத்தான்(திரைப்படம்)

பணியாற்றிய திரைப்படங்கள்

  • ரோஜா
  • இந்தியன்
  • ஆய்த எழுத்து
  • அந்நியன்
  • பாய்ஸ்
  • முதல்வன்
  • கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
  • ஜீன்ஸ்
  • உயிரே
  • விசில்
  • கன்னத்தில் முத்தமிட்டால்
  • சிவாஜி த பாஸ்
  • எந்திரன்
  • வரலாறு
  • செல்லமே

மறைவு

உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சுஜாதா சிகிச்சை பலனின்றி பிப்ரவரி 27, 2008 இரவு 9.30 மணியளவில் மறைந்தார். மறைந்த ரங்கராஜனுக்கு அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் 29. பெப்ரவரி 2008 அன்று சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் நடைபெற்றன.[1],[1]

மேற்கோள்கள்




    1. எழுத்தாளர் சுஜாதா மரணம் (தட்ஸ்டமில்.காம்)

    வெளி இணைப்பு

    கள்

    • WriterSujatha.com - சுஜாதாவின் இணைய பக்கம்.
    • அம்பலம் (சுஜாதா நிர்வகித்த இணைய இதழ்)
    • சுஜாதாவின் வாழ்க்கைக் குறிப்பு
    • தமிழ் நண்பர்களில் சுஜாதா
    பகுப்புகள்:
    • தமிழக எழுத்தாளர்கள்
    • அறிவியல் தமிழ் எழுத்தாளர்கள்
    • 1935 பிறப்புகள்
    • 2008 இறப்புகள்
    • கலைமாமணி விருது பெற்றவர்கள்

    வழிசெலுத்தல் பட்டி

    • புகுபதிகை செய்யப்படவில்லை
    • இந்த ஐபி க்கான பேச்சு
    • பங்களிப்புக்கள்
    • புதிய கணக்கை உருவாக்கவும்
    • உள்நுழை
    • கட்டுரை
    • உரையாடல்
    • படிக்கவும்
    • தொகு

    மேலும்

    இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 5:58 PM கருத்துகள் இல்லை:

    செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

    பன்னீர் செய்த தவறென்ன?
    கண்ணீர் சிந்தியதா?
    பவ்வியம் காட்டியதா?
    பணிவை நடிப்பாக்கியதா?
    பாவம் பன்னீர்!
    பைத்தியங்கள் தமிழக மக்கள்!
     
    இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 4:45 AM கருத்துகள் இல்லை:
    இது தமிழ் வரலாற்றில்
    இன்னுமொரு களப்பிரர் காலம்
    மறக்கப்பட மறைக்கப்பட வேண்டிய
    மற்றுமொரு வரலாறு
    இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 4:37 AM கருத்துகள் இல்லை:

    சட்டம் ஒரு கழுதை என்றார் சான்றோர்
    முன்னங் கால்களை கட்டி வைத்தால்
    பின்னங்கால்களால் உதைக்கும் !
    இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 4:31 AM கருத்துகள் இல்லை:

    ஞாயிறு, 29 ஜனவரி, 2017

    அடக்குமுறை


    அடக்குமுறைக்கு ஆயுள் குறைவு என்பது
    அகிலம் அறிந்த .உண்மை.
    அன்று மன்னராட்சியில் அடக்குமுறை .
    இன்று  மக்கள் ஆட்சியிலும் அடக்குமுறை.
    உண்மைகள் உணர்த்தப்பட்டாலும்
    மனித மனம் நம்ப மறுக்கத்தான் செய்கிறது.
    வ்ரலாறு படைக்கப்பட்டாலும்
    வன்முறைகள் தூண்டப்படத்தான் செய்கின்றன.
    வரலாற்றை திரும்பிப் பார்த்தால்
    அடக்குமுறையாளர்களின் அடிமனதில்
    ஆழமான பயமே தெரிகிறது. இது
    அனைத்து காலங்களுக்கும் பொருந்தும் .
    இப்போது வந்துள்ள டிரம்ப் காலம் வரை.
    இனி வரும் காலங்களிலும் தொடரும்
    என்ற உண்மையை உணர்ந்தே
    செயல் பட வேண்டும்.
    மெரீனா தந்த வெற்றியை அங்கே
    காளைக்கு சிலை அமைத்து
    காலமெல்லாம் கொண்டாட வேண்டும் .
    இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 11:07 AM கருத்துகள் இல்லை:

    சனி, 28 ஜனவரி, 2017

    மெரீனா சொல்லும் பாடம் !

    மெரீனா சொல்லும் பாடம் !


    திருக்குறளும் திருத்தப் படலாம் தீங்கில்லா
    தமிழ்ச்சொல் லால்என் பேன்!

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
    சான்றோன் எனக்கேட்டத்  தாய் ! - இது குறள்

    திருத்தம்

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகவை
    சான்றோர் எனக்கேட்டத் தாய் !  
    இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 3:58 PM கருத்துகள் இல்லை:

    செவ்வாய், 24 ஜனவரி, 2017

    வீரம் பொதுமறைதான்

    வீரம் பொதுமறைதான் 


    வேலனுக்கும் வீரமுண்டு
    வேல்விழிக்கும் வீரமுண்டு
    கண்டேன் நான் கடற்கரையில்
    கண்டங்கே களிப்புற்றேன்!

    வெற்றிதனை கொண்டாட
    வேண்டாமே முரசொலிகள் !
    சாதனையை போற்றிடவே
    சங்கொலிகள் தேவை இல்லை !

    சங்கம் வளர்த்த தமிழ்ச் 
    சொற்கள் மட்டும் போதும் என்பேன் !
    வீர தமிழ் முழக்கங்கள்
    விண்ணதிர வேண்டும் என்பேன் !

    பேச்சுக்கு உரிமையில்லை
    பேராண்மை எதற்கு  என்பேன் !
    எழுத்துரிமை இல்லை என்றால்
    எதற்கிங்கே  குடியரசு !

    கூட்டாட்சி தத்துவத்தை
    குழிதோண்டி புதைத்துவிட்டீர் !
    கொல்லுமடா உம்மை எந்தன்
    கொடுந்தமிழ்ச்  சொற்கள் தாமே!
    இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 4:23 PM கருத்துகள் இல்லை:

    பரணி பாட வேண்டும்

    ஏன் அடித்தாய் எங்களை நீ!
    யார் சொல்லி அடித்தாய் நீ ?
    சட்டம் உம்  கையில்
    சர்வதிகாரம் உம்  கையில்
    என்று எண்ணி நீயும்
    இங்கு எம்மை அடித்தாயோ?

    தமிழ் வழிப் போர்க்கண்டு
    தரணியே வியக்கையிலே
    தடியடி நடத்தி நீயும்
    தரம் கெட்டு போனதுமேன் ?

    பாரை  வியக்க வைத்து
    பார் போரை  அதிரவைத்த
    பைந்தமிழ் சொந்தங்களே -உம்புகழலை
    பரணி பாட வேண்டும் என்பேன் !

    யாரும் பாடலாம். நானும் முயன்றிடுவேன் !

    இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 2:25 PM கருத்துகள் இல்லை:

    திங்கள், 23 ஜனவரி, 2017

    சல்லிக்கட்டு போராட்ட களம்

    கடல் விளிம்பில் நிற்கும் போராளிகளை
    கண்டு கண்கள் கசிகிறது. நெஞ்சம்  பதைக்கிறது
    காவலர்களை ஏவிய கயவர்களே
    கருணை சிறிதும் இல்லையா?
    ஓட்டு கேட்டு வரும் போது
     உங்களுக்கு வைக்கிறோம் வேட்டு !

    இடுகையிட்டது KRISHMANIVEL நேரம் 10:56 AM கருத்துகள் இல்லை:
    புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
    இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

    வருக!வருக!

    தங்கள் வரவு நல்வரவு ஆகுக. எம் வலைப்பூவிற்குள் நுழைந்தமைக்கு நன்றி. கவிதைகளை பருகுங்கள்.

    பின்பற்றுபவர்கள்

    வலைப்பதிவு காப்பகம்

    • ►  2020 (2)
      • ►  ஜூலை (2)
    • ►  2019 (1)
      • ►  ஜூன் (1)
    • ▼  2017 (19)
      • ▼  ஏப்ரல் (1)
        • இல்லாள் சொல்லால் நல்லாள் -என்றால் இனித்திடுமே என்...
      • ►  மார்ச் (3)
        • டெல்லி சென்று போராடும் டெல்டா தமிழக விவசாயிகள்! ...
        • கட்ஜு எனும் ஜட்ஜுவே - உம்மை தமிழன் என்று சொல்லச் ...
        • வாடிவாசல் திறந்த பின்னே! நெடுவாசல் மூடப்பட வேண்...
      • ►  பிப்ரவரி (10)
        • டே உன் தொல்லை தாங்க முடியலைடா! எப்ப நிறுத்துவ?
        • நீ கமலஹாசன் போல நடனம் ஆடுவதும் இரண்டாம் ஆண்டில் வ...
        • குன்கா குன்கா குன்கா இறைவன் நீயே என்பேன்! வரலாறு ...
        • கொண்டாட்டம் மனசுக்குள்ளே கொண்டாட்டம்! திண்டாட்டம்...
        • தப்பித்தது தமிழகம் தற்காலிகமாக தலை வணங்குகிறேன் க...
        • sujatha
        • பன்னீர் செய்த தவறென்ன? கண்ணீர் சிந்தியதா? பவ்விய...
        • இது தமிழ் வரலாற்றில் இன்னுமொரு களப்பிரர் காலம் மற...
        • சட்டம் ஒரு கழுதை என்றார் சான்றோர் முன்னங் கால்களை...
      • ►  ஜனவரி (5)
        • அடக்குமுறை
        • மெரீனா சொல்லும் பாடம் !
        • வீரம் பொதுமறைதான்
        • பரணி பாட வேண்டும்
        • சல்லிக்கட்டு போராட்ட களம்
    • ►  2009 (5)
      • ►  பிப்ரவரி (3)
      • ►  ஜனவரி (2)

    என்னைப் பற்றி

    KRISHMANIVEL
    எனது முழு சுயவிவரத்தைக் காண்க

    எனது வலைப்பதிவு பட்டியல்